tamils

 


 


Tuesday, 2 May 2017

க்ஷத்திரியர் என்பது ஒரு ஜாதியா? பகுதி - 4 - Pandyan Mallar

"பிராமணர்", "க்ஷத்திரியர்", "வைசியர்", "சூத்திரர்" என்ற சொல் தொல்காப்பியத்தில் எங்குமே குறிப்பிடவில்லை. அதற்க்குமாறாக “அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்” என்றுதான் குறிப்பிடப்படுகிறது. இங்கு குறிப்பிடக்கூடிய அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற மள்ளர் குடிகளை வட மாநிலத்தைச் சேர்ந்த “பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர்" போன்ற குடிகளுடன் பொருத்திப்பார்ப்பது தவறு என பல வரலாற்று அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



ஆதியில் உழவர் குடியினர் வேளாண்மைப் பண்பினால் வேளாளர் எனவும், பின்னர் இடைக்காலச் சோழர் ஆட்சியில் பஞ்சாயத்துப் போன்ற குடும்புகளில் (ஊர்ச் சபைகளில்) அங்கம் வகித்து அவற்றை நடத்தி வந்ததால் வெள்ளாளர் எனவும் வழங்கலாயினர். ஆற்று வெள்ளத்தை அடக்கி ஆளும் தன்மையினால் வெள்ளாளர் என்றும் அழைத்துக்கொண்டார்கள். அவர்களை கல்வெட்டுகளில் வேளான் / வேளாண், வேளார், வேளாளர், வேளாளன், வேளீர், மூவேந்த வேளான், தென்னவன் மூவேந்த வேளான் என்று சிறப்பாக கூறப்பட்டுள்ளது.



அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் அனைவரும் மள்ளர் குடியிலிருந்து தோண்றியவர்கள் என்பது தெளிவு. இங்கு குறிப்பிடகூடிய அந்தணர் என்பவர் இன்றைய பிராமணர் இல்லை என்பதை கீழ்கண்டவாறு தெளிவுபடுத்தலாம்.


திருக்குறள் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்துள்


“அந்தணரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்

செந்தண்மை பூண்டொழுகலான் “


என அந்தணரென்னும் பெயர் நீத்தாருக்குரித்தாகக் திருவள்ளுவ நாயனர் கூறியிருக்கின்றார்.


இதற்குப் பரிமேழகரின் விளக்க உரையில்,


“அந்தணரென்பது அழகிய தட்பத்தினையுடையாரென ஏதுப் பெயராகலின் அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாதென்பது கருத்து” என்று கூறினர்.


” நூலேகரக முக்கோன் மணையே

ஆயுங் காலை யந்தணர்க் குரிய “


என்னும் தொல்காப்பிய மரபிற் சூத்திரத்தானும் அந்தணரென்போர் துறவிகளே யென்பது இனிது புலனாகின்றது.


அந்தணர் தமிழ் மக்களல்லாத பிறரெனச் சிலர் கருதுவது பிழையான கோட்பாடாகும்.


“எறித்தரு கதிர்தாங்கி யெய்திய குடை நீழ

 லுறித் தாழ்ந்த கரகமுமுரைசான்ற முக்கோலு

 நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்

  குறிப் பேவல்செய்மாலைக் கொளைநடை யந்தணீர்.”

                                                                              (கலி-பாலை, 9 - 1 - 4)


இதன் பொருள் – குடையினால் வெயிலைத் தாங்கி உறியிலே வைத்த தண்ணீர்க் கரகத்தையும், முக்கோலையும் தோளிடத்தே சுமந்து செல்லும் இயல்புடைய அந்தணீர் என்பதாகும்.  ( ந.சி. கந்தையா பிள்ளை - தமிழர் சரித்திரம், பக். 72)


கபிலர் பாடிய புறநானூறு செயுள் அந்தணர் ஊன் புசிக்கும் இயல்பினர் என காட்டப்பட்டுள்ளது.


பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை

கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது

பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும் -  (புறம் – 14)


நின்னை பாடும் யாமோ, ஊனும் கறியும், துவையும் சோறும் எடுத்து உண்பதை தவிர, எம் கைகளால் வேறெதுவும் செய்தறியோம் – என்றும்


அட்டு ஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன் சோறும்

பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி

நட்டனை மன்னோ முன்னே         -  (புறம் – 113)


ஆட்டுக் கிடாவை வெட்டிச் சமைத்து ஊனும் சோறும் வேண்டி வேண்டி அளிப்பவர் சிலர். அத்தகைய வளத்துடன் முன்னர் நீ எமக்கு நட்புடைமையாக விளங்கினையன்றோ. – என்றும் குறிப்பிடுகிறார்.


இச்சான்றுகளால் அந்தனர் என்பது ஒரு சாதி அல்ல என்பதும், அவர்கள் அந்தந்த நாட்டைச்சேர்ந்த முற்றும் துறந்த துறவிகள் என்பதும் தெளிவு.



அதேபோல் வேளாளர் என்பவர் சூத்திரர் இல்லை என்பதை கீழ்கண்ட கல்வெட்டு சான்று கூறுகிறது.


"வேட்டைக்குப் போன ஒரு சூத்திரன் குறி தவறி ஒரு வேளாளன் மீது அம்பை எய்து விட்டான். எழுபத்தொன்பது நாட்டு விவசாயிகளும் ஒன்று கூடி சூத்திரனை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர்". இதில் சூத்திரன் என்பவன் வேறு , வேளாளன் என்பவர் வேறு எனத் தெளிவுபெறுகிறது. (இரா. தேவஆசீர்வாதம் - வேளாளர் யார்)



அதோபோல் வேளாளர் என்பவருக்கு க்ஷத்திரியர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை கீழ்கண்ட கல்வெட்டு சான்று கூறுகிறது.


க்ஷத்ரிய சிங்க மூவேந்த வேளாரும், (A.R.E. 1916 Intro P.119), E.I – Vol.XXI. No:38

செங்கள்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக, திருமுக்கூடலில் உள்ள கி.பி. 1068 ஆண்டைச்சேர்ந்த வீரராஜேந்திர சோழனின்   5 – ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று


“……க்ஷத்திரிய சிங்க மூவேந்த வேளாரும் உத்தமசோழ மூவெந்தவேளாரும் பார்மன்னு குலதீப மூவேந்த வேளாரும் இரட்ட குலகால மூவேந்த வேளாரும் உத்தம பாண்டிய மூவேந்த வேளாரும் வீரசோழப் பல்லவரையருந்........ண......ரி…. மூவேந்த வேளாரும் முடிகொண்ட சோழ மூவேந்த வேளாரும் வளவராதித்த மூவேந்த வேளாருங் ……………”

என்று குறிப்பிடுகிறது.


 (Selected Inscriptions of Tamil Nadu, Serial No. V : 3, page - 143).



சோழர் பெருவேந்தர் காலத்தில் வேளாண்குடிமக்கள் 'சித்திரமேழி நாட்டார்' என்ற வேளாளர் அமைப்பை ஏற்படுத்தி, தங்களது தனித்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் ஒரு மெய்கீர்த்தியையும் உருவாக்கிக் கொண்டனர். அதைப்பற்றிய வடமொழி சுலோத்துடன் கூடிய கல்வெட்டு கி.பி. 1057 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோயில் முன் மண்டபக் கிழக்குக் குமுதத்தில் உள்ளது. வாய்ச்சண்டையில் அண்ணனைக் கொன்ற தம்பிக்கு மரணதண்டனை வழங்குவதற்க்கு பதிலாக, வயதடைந்த பெற்றோரைக் காப்பாற்றுவதற்காக மரண தண்டனையை ரத்து செய்து அரை நந்தாவிளக்கு வைக்க அவ்வூர் சபையால் ஆணையிடப்படுகிறது. அதில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் வேளாண்குடி மக்கள். இந்த தீர்ப்பில் கையேழுத்திட்ட பத்துப் பேர்களில் இலத்தூர் சேக்கிழான் அத்திமல்லன் சிராளனும், பாடா நாட்டு கங்கநல்லூர் மாதெட்டன் இருங்கோளன் என்பவறும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். மேலும் அக்காலத்தில் வேளாளர்கள் "கொலை குற்றமே புரிந்தாலும் மரண தண்டனையில்லிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது" என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் அக்கல்வெட்டு இந்த பூமியில் நான்கு வர்ணங்களையும் தோற்றுவித்து சர்வ உலகத்தையும் காபாற்றி செங்கோலை முன் நிறுத்தி மனு நெறி தழைக்க சித்திர மேழி தம்மம் இனிது நடத்துகின்ற ஸ்ரீராஜேந்திர சித்ரமேளிப் பெருக்காளரோம்  என்று மிக தெளிவாக  குறிப்பிடுகிறது.



 கல்வெட்டுச் செய்தி:


ஸ்வஸ்திஸ்ரீ இலங்கையும் யிரட்டபாடியுங் கொண்டு பேராற்றங்கரைக் கொப்பத்தாஹவல்லனை புறங்கண்டவன் ஆனையுங் குதிரையும் பெண்டிர் பண்டாரமுங் கொண்டு விஜையாபிஷேகஞ் செய்து ஸிம்ஹாஸனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீராஜேந்திர தேவர்க்கு யாண்டு அஞ்சாவது


ஸ்ரீமத் பூதேவி புத்ராநாம் சாதுர்வண்ண ஸநோத்பவ ஸர்வலோக ஹிதார்த்தாய சித்ரமேளஸ்ய ஸாஸநம்


ஸ்ரீபூமிதேவிக்கு மக்கள்ளாகி யறம்(வ)ளர புகழ்க்(க)கலிமெலியச் செங்கோலே தெய்வமாகத் திசையனைத்துஞ் செவிடு படாமைச் சித்திர மேழி தம்மம் இனிது நடாத்துகின்ற ஸ்ரீராஜேந்திர சித்ரமேளிப் பெருக்காளரோம்


பங்களநாட்டுத் தெற்கில் வகை செளுறூர் நாடான புதநலப்பாடி நாட்டுக் கங்கபுரத்திருக்கும் வெள்ளா(ள)*ன்(ன்)


தருப்பேறுடையான் தாழிகோனன் வந்து, “என் மகன் சங்கரத்தடியளும் என் மகன் பெரியானும் சூடுபடு(க்)கிறடத்துத்,தம்பியை தமையன் அரிசப்பட்டு அடித்தான்; அடிக்க, தம்பியும் தமையனை யெதிரேயடித்தான்; தம்பிய(டி)பிச்ச அடியிலே தமையன் பட்டான்,” என்று வந்து சொல்ல, உனக்கு இவ்விரு வருமல்லாது மக்களுள்ளரோ வென்று கேட்க, மற்று மக்களாருமில்லை இவர்கள் தாயுநானுமேயுள்ளோ மென்று சொன்னான். சொல்ல, அர்த்தந்தானுண்டோ வென்று கேட்க, 'அர்த்தமுமில்லை என்றான்; என்ன,


ஒரு குடிக்கேடானமையிலும் இவர்களை ரஷிப்பாரிலாமையிலும் அர்த்தம் இலாமை(யி)லுந் திருத்தாமரைப்பாக்கத்துத் திருவக்நீஸ்வரமுடைய மஹாதேவர்க்குத் திருனந்தாவிளக்காக அரைவிளக்கு வைத்து வயஸ்பரிணதை சென்ற தாயையுந் தமப்பனையும் ரஷிப்பானாக; தம்ம நோக்க இவனிதற்குப்பட வேண்டா” வெந்று பெருக்காளர் விதித்தமையில்,


இது சுத்தப(ட்)டிகையாகவும், இது நோக்கிநிவனுக்கு தேவை புகுந்தாத தாக(க)வும் விதித்தோம் பெருக்காளரோம். இதினை அன்றெ(ன்)று எடுத்துக் காட்டுவான், பெரிய நாட்டுக்குப் பிழைத்தான்.

  

மேழிநாட்டுப் பட்டனே(ன்) என்னெழுத்து. இப்படியறிவேன் மண்டை குளநாட்டுக் குராப்பாக்கத்து வெள்ளாளன் பிரம்பலூர் கிழவன் கேசவபடியன்னேன்; இப்படியறிவேன் இலத்தூர்ச் சேக்கிழான் அத்திமல்லன் சீராளன்னேன்; இப்படி அறிவேன் தாமரைப் பாக்கிழான் சூற்றி ஆடவல்லான்னேன்; இப்படியறிவேன்வயல்லாமூர் வெள்ளாளன் இலங்காடு உடையான் குட்டேறன் பொற்காளியேன்; இப்படி அறிவேன் கீரனூர்ச் சாவல் காடாடி மணிகண்டனேன்; இப்படி அறிவேன் பாடாநாட்டு கங்க(க) நல்லூர் மாதெட்டன் இருங்கோளனேன்; இப்படி அறிவேன் தச்சூழான்பாடி வெள்ளாளன் பாரந்துளர் உடையான் நக்கன் பெரியானேன்; இப்படி அறிவேன் களிக்கொற்றப்பாடி சாத்தமுழான் குந்றேறனேன்; இப்படி அறிவேன் சோமாசிபாடி வெள்ளாள(ன்) தந்தை பிருதிவலி கருமானிக்கனேன்; இப்படி அறிவேன் பரமண்டலத்து பள்ளிகள் நாடுசெ(ய்)வான் சித்திரமேழினாடு உடையானேன்; இவ்வகை பட்டாங்கு சொல்ல எழுதினேன், தச்சுஊர் ப்ராஹ்மணன் பாரத்வாஜி திருவழுதி நாடனேன் இவை என்னெழுத்து.



(தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை தொடர் எண் 29 / 1998 தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், பதிப்பாசிரியர்கள் –          முனைவர்      சு. இராசகோபால்,  முனைவர் ஆ. பத்மாவதி,  ஆர். வசந்த கல்யாணி, தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுதுறை வெளியீடு எண் 141 –பக்கம் 53 – 54, 1999. மற்றும்   Select  Inscriptions  Serial No:  IV :6. )



மேலும் மூவேந்தர் ஆட்சி காலத்தில் வேளாண் குடியில் பலர் உயர் அதிகாரிய இருந்துள்ளனர் என்பதை கீழ்கண்ட சான்றுகள் உறுதிசெய்கிறது.


1. வேளாளர்களில் பலர் உயர் அதிகாரிகளாக அரசில் பணிபுரிந்தனர். பாண்டிய மன்னன் சடையன் மாறன் கீழ் பராந்தகப் பள்ளி வேளானாயின நக்கன் புள்ளன் என்பவன் உயர் அதிகாரியாகத் திகழ்ந்தான். ராஜசிம்ம பாண்டியனுக்கு பெருங்காகூர் கோன் வேளான் கணக்கனாக இருந்தான். (பெரிய சின்னமனூர் சாஸனம்). சோழர்களது கல்வெட்டுகளில் பெருமளவு உயர் அதிகாரிகளாக மூவேந்த வேளாளன் என்னும் பட்டம் பெற்றவர்கள் பணிபுரிந்து இருக்கிறார்கள். இவர்கள் வேளாளர்கள் என்பதில் ஐயமில்லை. இராஜராஜனின் கீழ் பொய்கை நாட்டு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளாளன் என்பவன் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தான். அவனது திறமையைப் போற்றி அவனை தஞ்சைப் பெரிய கோயிலில் ஸ்ரீகாரியமாக அரசன் நியமித்தான். உத்தரங்குடையான் கோன் வீதவிடங்கனான வில்லவ மூவேந்த வேளான் என்பவன் இராஜராஜனுக்கு பெருந்தரமாகப் பணிபுரிந்தான். இராஜாதிராஜன் கீழ் வேளாளக் கூத்தனான செம்பியன் மூவேந்த வேளான் என்பவன் உயர் அதிகாரியாக பணிபுரந்தான். சோழர் காலத்தில் பணிபுரிந்த நூற்றுக் கணக்கான அரசங்க அதிகாரிகள் மூவேந்த வேளார் எனப்பட்டம் பெற்றதிலிருந்து வேளாளர் உயர் அதிகாரிகளாகப் பெரும்பாலாக இருந்தனர் என்பதில் ஐயமில்லை.


(யாவரும் கேளிர் – நாகசாமி)


2. இரண்டாம் குலோத்துங்கன் பட்டங்களில் முக்கியமானது “அனபாயன்” என்பது. இது, கல்வெட்டுகளிலும் இவனைப்பற்றிய உலாவிலும் வருகிறது. அரசனுடைய அத்தாட்சிக் கையெழுத்திடும் அனபாய மூவேந்த வேளாளன் என்ற அவனுடைய செயலாளரின் பெயரிலும் இந்தத் தொடர் சேர்ந்து வழங்கப்பட்டுள்ளது. அரசன் மானியமாகக் கொடுத்த பல ஊர்களுக்கு அனபாய நல்லூர் என்று பெயர் இடப்பட்டது.  ( 271 / 1915; 533 / 1921; 531 / 1912)


(K.A. நீலகண்ட சாஸ்திரி – சோழர்கள் பக்.476)



3. பல்லவ மன்னர்கள் தங்கள் அரசாட்சியை இழந்த பின்பு சோழர் மற்றும் பாண்டியருக்கு கட்டுப்பட்ட குறுநிலத்தலைவராகவும் இருந்துள்ளனர். மேலும் ஒருசிலர் சோழர் படையில் முக்கியமான தலைமை பதவியிலும் இருந்துள்ளனர் இவர்கள் தொண்டைமான் என்றும் பல்லவராயன் என்றும் அழைத்துக்கொண்டனர். அவ்வாறு சோழர்படையில் இருந்த ஒரு பல்லவ மன்னன்தான் கருணகரத் தொண்டைமான் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த கருணகரத் தொண்டைமானை கல்வெட்டு வேளான் என மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.  வேளான் என்பது வேளாண்குடிகளுக்கு கொடுக்கப்படும் சிறப்பு பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.


" ஸ்வஸ்திஸ்ரீ கோ இராசகேசரி வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று - ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து எயில்நாட்டுத் திருவத்தி யூராழ்வார்க்குச் சோழ மண்டலத்துக் குலோத்துங்கசோழ வளநாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி யுடையான் வேளான் கருணாகரனான, தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருதுந்தா விளக்கு ' (SII Vol. IV No 862, and A.R.No. 49 of 1893 ).



இதை உறுதிசெய்யும்விதமாக முதற் குலோத்துங்க சோழனின் 33 - ஆம் ஆட்சியாண்டிற்குரிய கோதாவரி மாவட்டம் திராட்சாராமத்தில் காணப் பெறும் கல்வெட்டொன்று கருணாகரனின் தருதை பெயர் சீரிளங்கோ என்றும், திருநறையூர் நாட்டு மண்டலஞ்சேரி என்ற ஊரவன் என்றும், கருணாகரனின் இயற் பெயர் 'திருவரங்கன்’ என்றும், இவன் வண்டுவராஜன்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவனை “சத்வைஷ்ணவன்” என்றும் தெளிவாக குறிப்பிடுகிறது.  (SII Vol. IV No.1239 and A.R.No. 349 of 1893).





4.இது போல் பல பல்லவராயர்கள் வெள்ளாளன் என்று அழைக்கபெற்றதாக சான்றுகள் கூறுகிறது.  


மதுரை மாவட்டம் கீரனூர் கல்வெட்டில் வீரராஜேந்திரன் காலத்தில் ஒரு வெள்ளாளன்  பல்லவரையன் என்று ஆழைக்கபெற்றதாக கூறுகிறது.


1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவநச்சக்கரவத்தி

   கள் ஸ்ரீவீரரா

2. செந்திர தெவற்கு யாண்டு பதிந்முன்

    றாவது

3. பொங்கலூக்காநாட்டு கீரநூ

4. ராந கொழுமங்கொண்ட சொ

5. ழநல்லூர் வெள்ளாழந் துட்டந்

6. செல்லா பியங்கநான அமரபுயங்

7. கப் பல்லவ(ரை)யநென்


(A.R. No. 586 of 1893)



5. அதேபோல் கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கடத்தூர் மருதீசர் கோயிலுக்கு வெள்ளாளன் குமரதனஞ்சிய பல்லவரையன் என்பவர் கொடுத்த கொடை பற்றி பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.


    “படைவளவன் வெள்ளப்பநாடு பாலைக்காட்டுச்சேரி "வெள்ளாளந் குறிச்சியரில் குமரந் குமரநாந குமரதனஞ்சிய  பல்லவரையன்” கொடை வழங்கியது பற்றி கூறுகிறது. (கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண்: 25 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு),



    “பாலைக் காட்டுச்சேரியில் வெளாழந் குமரந் குமரநாந குமரதநஞ்சிய பல்லவரையன் திருவெம்பாவைத் திருகூட்டத்துக்கு” கொடை வழங்கியது பற்றி கூறுகிறது. (கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண்: 43 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு).



    கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கடத்தூர் மருதீசர் கோயிலுக்கு முன்பு தன்மம் செய்த குமரன் குமரனான குமரதனஞ்சிய பல்லவரையனேன் இறைவனுக்கு அப்ப அமுது செய்ய காசு, நெல், அரிசி கொடை வழங்கியது பற்றி கூறுகிறது (இக்கோயிலுக்கு முன்பு தன்மம் செய்தவர் வெளாழந் குமரந் குமரநாந குமரதநஞ்சிய பல்லவரையன் அழைக்கப் பட்டுள்ளார்)


(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண்: 46 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு).


    “பாலைக்காட்டுச்சேரியிலிருக்கும் வெள்ளாளன் குமரன் குமரனான குமரதனஞ்சிய பல்லவரையனேன்” வழங்கிய கொடை பற்றி கூறுகிறது. (கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண்: 47 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு),



இதில் குமரதனஞ்சிய பல்வரையன் என்பவர் தன்னை வெள்ளாளன் என தெளிவாக குறிப்பிடுகிறது.


6.திருப்பூர் மாவட்டம் பிரம்மியத்தில் உள்ள திருவலஞ்சுழிநாதர் கோயிலுக்கு “வீரசங்காத சதுவேதிமங்கலத்தில் விபியத்திருந்து வாழும் வெள்ளாளன் செம் (பள்ளி விக்) கிரமசோழபல்லவரையன் மணவாட்டி” கொடுத்த கொடை பற்றி கூறுகிறது. (திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள் -  த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண். 135/ 2010).


7. "இவ்வூர் இருக்கும் வெள்ளாளன் ஸ்ரீ ராஜராஜ தேவர் படை ஜநநாத தெரிஞ்ச வலங்கை வேளைக்காரரில் வண்ணக்கன் ஐய்யாறானாகிய சித்திரை யாளி” என்று கல்வெட்டுக் கூறுவதால் ஸ்ரீ ராஜராஜ தேவர் வெள்ளாளன் என தன்னை அழைத்துக்கொண்டதை அறியலாம்.  (தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 17 எண். 238 மற்றும் A.R.No. 216 of 1904). 


8.கோயமுத்தூர் மாவட்டம், கோபிச்செட்டி தாலுக நம்பிபேரூர் தான்தோன்றிஸ்வரமுடையார் கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு வெள்ளாள சோழரில் தேவன் இராசராசன் என குறிப்பிடுகிறது.


கல்வெட்டு வாசகம்:


    ஸ்வஸ்திஶ்ரீ வீரபாண்டிய தெ-

    வற்கு யாண்டு யக வது ஐப்-

    பசி மாதம் வடபரிசாரநாட்-

    டு நம்பிபெருர் வெள்ளாள சொ-

    ழரில் தேவன் இராசராசனெ-

    ன் ஆளுடையார் தாந்தொன்றி

    ………………

    ரமுடையர்க்கு சந்தியா தீபமொ(ன்று)

    இக்கொயில் காணியுடைய சிவபிமாணரி

    ல் காசிவாக கொத்ரத்து ஆண்டந்

    செல்லப்பட்டனான திருச்சிற்றம்பல நமிம்.ஆ….



( தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 26 எண். 217 மற்றும் A.R.No. 205 of 1909 )





9.கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கடத்தூர் கொங்கவிடங்கீஸ்வரர் கோயிலுக்கு கடற்றூர் வெள்ளாளன் நம்பி கரியானான அபிமான சோழன் சந்தியா தீபத்துக்கு ஸ்ரீ பண்டாரத்தில் ஒடுக்கின அச்சு இரண்டுக்கும் காரைத் தொழுவில் நிலம் வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.


(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண்: 73 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு),



10.திரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீ வீரராஜேந்திர தேவறின் எட்டாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று பொங்கலூற்கால் நாட்டுக் கீரனூர் வெள்ளாளன் கழஞ்சிய தேவனான கொங்கு இளங்கோனேன் என்று இருங்கோவேள் வம்சத்தவரை (வெள்ளாளர்) வேளாண் சமூகம் என குறிப்பிடுகிறது.


கல்வெட்டு வாசகம்:


1. ஸ்வத்ஸிஸ்ரீ கொவிராசகெசரிபந்மரான திரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீவீர ராஜேந்திர தெவற்கு யாண்டு எட்டாவது பொங்கலூற்கால் நாட்டுக் கிரநூர் வெள்ளாளன் கழஞ்சிய


2.தெவநான கொங்கிளங்கொநெந் ஆளுடையார் திருவாகிஸ்வரமுடைய நாயநாற்கு சந்தியாதிப மொந்றுக்கு நாந் ஒடுக்கிந பொந் நகரக் கற்றளை


(தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 5, எண் 280, மற்றும் A.R.No. 604 of 1893)



11. சோழ மன்னர் ஸ்ரீராஜராஜ தேவர் – I ம் காலத்தைச் சேர்ந்த வடஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலூகா சியமங்கலம் ஸ்தம்பீஸ்வரர் கோயில் பக்கத்திலுள்ள ஒரு பாறையில் உள்ள கல்வெட்டு வெள்ளாளன் கடம்பன் வெண்காடன் என கூறுகிறது. மேலும் விற்றுக் கொடுத்த நிலங்களின் எல்லைகள் கூறுமிடத்து, பள்ள வாய்க்கால், மல்லன் செருவூன்றி நாற்றாங்கால் ஆகியவைகள் குறிப்பிடப்படுகின்றன. இங்கு மல்லன் வேளாண் தொழில் செய்தான் என மிக தெளிவாக தெரிகிறது.


கல்வெட்டு வாசகம் (பகுதி) வரி 4 - 14


"………………………ராஜராஜதேற்கு யாண்டு 19 - ஆவது பலகுன்ற கோட்டத்து தென்னாற்றூர் நாட்டுத் சியமங்கலத்தூரோம் எங்களுர்த் திருக்கற்றளி மகாதேவற்கு சோழநாட்டுத் தென்கரைத் திருவிழுந்தூர் நாட்டு நல்லூர் புதுக்குடி வெள்ளாளன் கடம்பன் வெண்காடன் வைத்த திருநந்தா விளக்கிரண்டினுக்கு………………………….

இவ்வாய்க்காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை மல்லன் செருவூன்றி நாற்றுக்காற், குண்டில்களுக்குத் தெற்கும் இவ்விசைந்த பெருநான்கெல்லையுள் ளகப்பட்ட குழி 187 - ம் ஆக இறையிலி விற்ற குழி 1602……………… “


(தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 7, எண். 440)



12. மதுரை மாவட்டம் மேலூர் வட்டம்   அழகர் கோயிலில் உள்ள கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஸ்ரீ திருமாலிஞ்சோலை திருப்பதியில் இருக்கும் வெள்ளாளரில் கூத்தன் அத்தியூரான் சுந்தரபாண்டிய விழுப்பரையன் செய்வித்த நாட்டியக் கல் என குறிப்பிடுகிறது.

கல்வெட்டு :


1.ஸ்வஸ்திஸ்ரீ திருமாலிஞ்

2.சோலை திருப்ப

3.தியில் இருக்கும் வெள்ளா

4.ளரில் கூத்தன் அத்தி

5.யூரான் சுந்தரபாண்டி

6.ய விழுப்பரையன்

7.செய்வித்த நாட்டியக்

8.கல்.


(த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண். 310 / 2003)



13.திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டம் திருவெள்ளாரையில் சம்புநாதசாமி கோயில் முன்னுள்ள ஒரு பாறையில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு செல்லிக்கோன் மல்லாவானைப் புகழ்ந்து கூறுகிறது. இந்தச் செல்லிக்கோன் மல்லாவான் பரசிராமனின் மருமகன் என்றும் கூறுகிறது. இக்கல்வெட்டு சிதைந்துள்ளது, எனினும் மல்லாவானின் புகழ்பாடும் பாடலாக இது குறிப்பிடப்படுவது தெரிகிறது. பன்னிரண்டு வரிகள் கொண்ட இதைப்பாடியது பெருங்காவிதி சடையன் பள்ளி எனக் கூறுகிறது. மேலும் இக்கல்வெட்டில் செல்லிக்கோன் மல்லனை வெள்ளாள அரையர் என்று குறிப்பிடுகிறது. அந்த வெள்ளாளன் செல்லிக்கோன் மல்லனை ஒரு பள்ளி புகழ்ந்து பாடுகிறார்


கல்வெட்டு வாசகம் ( 1 - 2)


1. ஸ்வஸ்தி ஸ்ரீ. பாரத்வ ............லக ப்ரந்மாக்ஷத்ர குலோத்பவ

2. ல்லவ மஹாராஜ ..............ரமேஸ்வரநாயகி ஸ்ரீ உதிந

3. ந்திவர்ம(ற்)குய ..............3 றாவது திருவெள்ளறைப

4. ரிடையார் பிரம.............ல்ல(வ) மாம(றை)த் தொன்றி

5. வ(னி)வேந்தன்.............ள் மாற்பிடுகிளங்கோவே(ளா)

6. ன் சாத்தன் செ.........தன் மாமன் பரசிராமன்

7. திருமருமான் பெரு(b).........செல்லிக் கோமான் மல்ல

8. வா(ந்) (தொ)ண்மறவ..........தசூடி (ரா)டி சூடி (மா)மணி

9. வெளாளரையர்தங்...........லை நிரவ(யனந்தந்தி) மங்கை

10. க்கான் உறுதியான் புகழ்வளர்க மண்ணி மெலெய்

11. பிரம தெயத்துக்கு (உ)றுதியாந் விழுப்(பெரரையன்சா)

12. த்தன் மற்றவன்(ப்) புகழ்நி(ற்)க்க. இது பாடித்தந்தோந்.

13. பெருங்காவிதி சடையன் பள்ளி.


(தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி 12, எண். 48)




மூவேந்தர் ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட பல வெள்ளாளர்கள் அரசால் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டனர். இதை பல கல்வெட்டுச் சான்றுகள் உறுதிசெய்கின்றன.



 1. கி.பி. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குலோத்துங்க சோழனின் கல்வெட்டு “இவ்வூர் வெள்ளாளன் நெய்த வாயில் உடையான் வேளார் தேவர் கண்டான்" எனக் கூறுவது வெள்ளாளர், வேளார் என்று அழைக்கப்பட்டதன் எடுத்துக்காட்டு.


(தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8 எண். 23 மற்றும் A.R.No. 437 of 1902). (யாவரும் கேளிர் – நாகசாமி)



2.  ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யாண்டு 3-வது

         

      இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பைய்யரில் மள்ளன்


       சிறியனான ஆளுடையார் வில்லிஸ்வரமுடையார்


       கோயிற் துவார வாசலிற் திருநிலை காலிரண்டுமென் தந்மம்"


என்று கல்வெட்டு கூறுவதால் மள்ளர் சமூகத்தவர்களும் தங்களை          வெள்ளாளர்  என அழைத்துக்கொண்டனர் என கருதலாம்.


(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1, தொடர் எண் : 138 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு).



3.திருப்பூர் மாவட்டம் மாந்தளீஸ்வரமுடையார் கோயில் அர்த்தமண்டபம் தூணில் உள்ள கல்வெட்டு “ஸ்வஸ்திஸ்ரீ முத்தூரிலிருக்கும் வெள்ளாளன் மணியர்களில் வன்றன் மாராயனான தென்னவன் மூவேந்த வேளான் இட்ட கால்” என குறிப்பிடுவதால் ஒரு வெள்ளாளன் தன்னை தென்னவன் மூவேந்த வேளான் என அழைத்துக்கொண்டதை தெரிவிக்கிறது.


( திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள் -  த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண். 45 / 2010)



4.நிர்மணியில் வசிக்கும் வெள்ளாளந் செவ்வாயரில் காவலஞ் செம்பள்ளி என்பவன் நிர்மணியில் மேலை வசலில் அமைந்துள்ள பிள்ளையாருக்கு சந்தியா தீபம் ஒன்று வைக்க ஓர் அச்சு பணம் இக்கோயில் சிவப்பிராமணரிடம் கொடுத்து தீபமெரிய வழிவகைச் செய்துள்ளான்.


( திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள் -  த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண். 105 / 2010)



5.ஸ்வஸ்திஸ்ரீ சிற்றிலோட்டில்லிருக்கும் வெள்ளாளன் காடகளில் ஆடன் புலியனான  உத்தமசோழ மும்முடிச் சோழ மாராயன் இட்ட கல் .


(த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண். 51 / 2010)



6. வெள்ளாழந் கொச்சகளில் சோழன் கோவநேந் .


(த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண். 72 / 2010)



7.ஸ்வஸ்திஸ்ரீ சிற்றிலோட்டில்லிருக்கும் வெள்ளாளன் காடகளில் ஆடன் புலியனான உத்தமசோழத் தமிழ் வேளாந் இட்ட கல் .


(த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண். 46 / 2010)



8. கரைவழி நாட்டுக் கடற்றூர் ஆன ராசராச நல்லூர் வெள்ளாளன் கோவன் அரையனாந அரைசுக்கட்டி என்பவன் மருதுடையார்க்கு நிலம் கொடை வழங்கியது பற்றி கூறுகிறது.


(த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண். 17/ 2004)


9.வழலையூர் நாட்டுக் கருவலூரிலிருக்கும் வெள்ளாழன் மாடைகளில்               அரையன் காவன் என்பவன் காலகாலதேவர் கோயிலில் பெரிய                         திருமண்டபத்தில் நாயக்கத்தூண் ஒன்று கொடை அளித்த செய்தி                       கூறப்பட்டுள்ளது.


(த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண். 164/ 2004)



10.வெள்ளாளன் பயிரியரில் வீரசோழகங்கன் என்பான் சந்தியா தீபம்   எரிக்க அச்சுக்காசு கொடை வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது


(த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண். 93/ 2004)



11.பொங்கலூக்காநாட்டு கீரனூரான கொழுமங்கொண்ட சோழநல்லூரில் உள்ள கல்வெட்டுக்களில், கீழ்மணியர், மேல்மணியர் என இரு பிரிவுகள் வெளாளர்களில் குறிக்கப்படுகின்றன. வெள்ளாளன் கீழ்மணியரில் நீலன் புலியன் (தெ.க.தொ. 5 எண்.277) என்றும், வெள்ளாளன் மேல்மணியரில் காவன் உடையன் (தெ.க.தொ. 5 எண்.279) என்பவனும் குறிக்கப்பெறுகின்றனர்.



12.மதுரை மாவட்டம் கீரனூர் கல்வெட்டில் வீரராஜேந்திரன் காலத்தில்          "இவ்வூர் வெள்ளாளன் பூசகளில் அரையன் சிறியனான வேந்த சூளாமணி பல்லவரையன்" என்று கல்வெட்டு குறிக்கிறது.


(A.R.No. 588 of 1893)



13.வடபரிசார நாட்டு கவையன்புத்தூரிலிருக்கும் வெள்ளாழன் மலையரில் கேசன் கோநாந தமிழ் வேளான் என்பவன் காலகாலதேவர் கோயிலில் பெரிய திருமண்டபம் நாயகத்தூண் ஒன்று கொடை அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.


(த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண். 165/ 2004)



14.உத்தரங்குடையான் கோன் வீதிவிடங்கனான வில்லவ மூவேந்த வேளாளன் என்பவன் முதல் இராஜராஜனுக்காக கோழிப் போரில் பங்கு கொண்டான் என்று தஞ்சைக் கல்வெட்டு கூறுகிறது.


(யாவரும் கேளிர் – நாகசாமி)




மேலே கொடுக்கப்பட்ட பல கல்வெட்டுகள் மள்ளன், மல்லன், பல்லவராயர், பள்ளி, செம்பள்ளி, கடம்பன், காடன், வெண்காடன்,  வில்லவன், அரையன், உடையார், வேளான், மூவேந்த வேளான், வேளார் போன்றவர்களை வேளாளன் / வெள்ளாளன் என்றும் தொண்டைமானை “சத்வைஷ்ணவன்” என்றும்  தெளிவாக குறிப்பிடுவதால் க்ஷத்திரியர், சூத்திரர் என்ற சமூகம் மூவேந்தர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இல்லை என உறுதியாக கூறலாம்.


                                                                                                       (தொடரும்)


கி. பி. 1070-களில் இருந்து தொண்டைமண்டலத்தில் தெலுங்கு சோழர்கள் ஆதிக்கத்தில் வந்துள்ளது. யார் இந்த தெலுங்கு சோழர்கள்? கி.பி.1070 ஆதிராஜேந்திரன் என்ற சோழர் குல தமிழ் வம்சாவளி அரசியல் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பிறகு, தெலுங்கு சோழர்கள் எனப்படும் குலோதுங்க சோழர்கள் ஆட்சி ஆரம்பமானது. ராஜராஜ சோழனின் மகள் குந்தவி நாச்சியார் ,வேங்கி நாட்டு அரசனுக்கு திருமணம் செய்து கொடுத்து அந்த வம்சாவளியில் வந்தவர்கள் தங்களை தெலுங்கு சோழர்கள் என்பார்கள். பிற்கால சோழப் பேரரசு மத்திய இந்தியாவில் குறிப்பாக வேங்கி ,சாளுக்கியம்,கங்கம் ( தற்போதைய கர்நாடகம்,அதாவது மைசூர்க்கு வடக்கே, ஹுப்லி, ஹம்பி, பேலுர்.(பேலுர் கோயில்,சோழத் தளபதியை வென்றதற்கு நினைவாக கட்டப்பட்டது.) என தனது பேரரசை விரிவுப்படுதியது. இவர்களது அரசியல் போர்கள் அனைத்தும் மத்திய கர்நாடகம், ஆந்திரம் காக்கிநாடா, இங்குதான் நடந்து வந்துள்ளது ,அவர்களது குல எதிரிகளான சாளுக்கியர்களிடமே இப்போர்கள் நடந்துளது. தற்போது கர்நாடகத்தில் உள்ள ஹம்பி விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்துள்ளது.

ராஜராஜ சோழன் மிகச்சிறந்த சோழப் பேரரசனாக இருக்கலாம் ,ஆனால் அவன் தன் இனம் அழியக் காரணமானவன் என்பதும் வரலாற்று உண்மை. முதலில் களப்பிரர்கள் அந்நியர்கள் இல்லை, அவர்களும் தமிழ் குடியே, என்பது அண்மைக்கால வரலாற்று, சமூகவியல் ஆராய்சியாளர்களின் கருத்து. சமணமே அவர்களது மதம். மிகச்சிறந்த நல்லொழுக்க நூல்கள் அவர்களது காலத்தில்தான் ஏற்பட்டது. திருக்குறள் மிகச்சிறந்த சான்று.மதம் என்றுமே அரசியலில் மிகப் முக்கிய பங்கு வகிக்கும். சைவம் வளர சமணம் அழிக்கப்பட்டது. அத்துடன் களப்பிரர்களும் அந்நியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இளங்கோவடிகளும் ,திருத்தக்க தேவரும் மிகச் சிறந்த புத்த சமண பேரறிஞர்கள். பிரமணத்தை எதிர்த்து வந்ததே சமணமும், புத்த மதமும், பிற்கால சோழர்கள் காலத்தில் அரசு மற்றும் அரசியல் ஆதரவு பெற்ற வெள்ளாளர்கள், பிரமணர்கள் முற்றிலுமாக சமண, புத்த மதங்களையும், அவர்களது ஆதரவு அரசுகளையும் அழித்தனர்.

அதியமான் நாடான தர்மபுரி,கிருஷ்ணகிரி, வல்வில் ஓரி நாடான கொல்லிமலை,சேலம் நாமக்கல், பாரி நாடான வட,தென் ஆற்காடு மாவட்டங்கள், பிரான்மலை,புதுக்கோட்டை,கோவில்பட்டி,கழுகுமலை மேற்கு தொடர்ச்சி மலை,கரூர் என்று பண்டைய குறுநில அரசுகள் அனைத்தும் சமணத்தையே ஆதரித்து வந்துள்ளது என்பதற்கு பல்வேறு குகைக் கோயில்கள், கல்வெட்டுகள் இலக்கியச் சான்றுகள் எனப் பல உள்ளன. எனவே களப்பிரர்கள் வெளியில் இருந்து வந்து சமணத்தைப் பரப்பினார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை.. மேலும் களப்பிரர்களின் தலை நகரான செந்தலை தற்போதைய திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சைக்கு நடுவில், தமிழகத்தின் நடு மத்தியில் உள்ளது. செந்தலை கல்வெட்டில் அவர்களை கள்வர் காவலன். என்று அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களது கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ் வட்டெழுத்துகளாகவே உள்ளது. அந்நியர்களான பல்லவர்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுதியவர்கள் களப்பிரர்களே. பல்லவர்கள் தாய்வழி மற்றும் திருமணங்கள், கங்கர்கள் என்கிற தற்போதைய கன்னடர்களுடனே இருந்துள்ளது. இரண்டாம் நந்திவர்மன் தனது ஆட்சியை நிலைப் படுத்திகொள்ள தமிழகத்தின் தொண்டைமண்டல போர் மரபினர்களான, குறுநிலமன்னர்களுக்கு அதிக அரசியல் முக்கியத்துவம் கொடுத்து வந்தான். எனினும் இக்குறுநில மன்னர்கள் பல்லவர்களை முழு அதிகாரத்துடன் ஆள விடவில்லை தங்களது தமிழின அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார்கள். பல்லவர்களின் அரசியல் போர்க்களம் பெரும்பாலும் தமிழகத்தின் வடக்கேதான் இருந்துள்ளது.

களப்பிரர்கள் கண்டிப்பான ஒழுக்க கட்டுப்பாட்டினை நடைமுறைப் படுதினார்கள். இதுவும் அவர்களது வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தது. அதுமட்டுமல்ல தொன்மையான தமிழ் குடிகள் மத ரீதியாக செயல்பட்டதில்லை. குறிஞ்சிக்கு சேயோனும்,முல்லைக்கு மாயோன்,மருததிற்கு இந்திரன் ,நெய்தலுக்கு வருணன்,பாலைக்கு கொற்றவை.என ஐந்திணை அடிப்படையில்தான் இறைவழிபாடு. இருந்துள்ளது.அதேபோல இந்திரனை முக்கியமான தெய்வமாக வழிப்பட்டனர். இந்திரா விழாவாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இதன் வெளிப்பாடுதான் இன்றைய சித்திரை திருவிழாவாக இருக்கும். பெருவுடையார் கோயிலில் கூட பிரம்மா, சரஸ்வதி, விஷ்ணு வரிசையில் இந்திரனும் இருக்கிறார். முக்குலதோர்கள் இன்றும் தங்களை இந்திர குலத்தவர்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். எந்த காலகட்டத்தில், இந்திரனைப் பற்றி இழிவான பூரணக்கதை புனையப்பட்டது என்பது ஆராய்ச்சிக்கு உரியது. அதுமட்டுமல்ல போர்க் கடவுளான இந்திரன்,பிற்பாடு வழிப்பாட்டுக்கு ஏற்றவனாக இல்லாமல் போனது ஏன் என்றும் சந்தேகம் வருகிறது. முக்குலத்தவ்ரின் மூலவன் இந்திரன் என்றும் அவன் வழி தோன்றல்கள் இழிவானவர்கள் என்று புராண புனைக்கதைகளிச் செய்தவர்கள் யாராக இருக்கும்? ( சில நேரம் தோன்றும் தமிழர்கள் ஏன் மறுடியும் இந்திரா விழாவினைத் தொடங்கக் கூடாது? ஒருவேளை அப்படிக் கொண்டாடினால் நமக்கு பழைய வீரமும் வாழ்வும் வருமோ? இதைதாத்தான் revival and renaissance of culture என்பார்கள்.)

இதில் மற்றொரு நிகழ்வையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இன்றைக்கும் கள்ளநாடுகளில் குலசாமி வழிப்பாட்டில் கோடங்கி மேல் சாமி இறங்கும்போது எங்கு இருந்து வந்தாய் என்றால் வடக்கிலிருந்து வந்தேன் ,என்றும் எதற்கு வந்தாய் என்றால் காராள வெள்ளாளனை கருவருக்க வந்தேன் என்று சொல்வார்கள் அதன் பின்னரே வந்திருப்பது குலசாமி என்று முடிவு செய்வார்கள். இது வழி வழியாக வருவது. பெரியவர் வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கள்ளர்கள் தொண்டைமண்டலத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்தக் கூற்று பெரும்பான்மையான ஆராய்சியாளார்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

விஜயநகர இளவல் குமரா கம்பண்ணன் தமிழகத்திற்குள் வரும்போது அவரது மனைவி கங்காதேவி மிகச் சிறந்த கவியரசி தனது குமார விஜயம் என்ற நூலில் தமிழகம் வரும்போது வழியெங்கும் மிகப்பெரிய அரச குடும்பங்கள், உயர்ந்த குடும்பங்கள் குழந்தைகள் உட்பட கொலை செய்யப்பட்டு அவர்கள் உடல்கள் அவர்களது வீடுகளில் எங்கும் கிடந்தன என்கிறார். மாலிக்கபூர் வரும்வழியில் உள்ள ஊர்களை அழித்து வந்தான் என்றாலும்,அவனது சிறுபடைக்கு அத்தனை உயர் குடும்பங்களையும் அழிக்க முடியுமா? அதுவும் உள்நாட்டில் உள்ள அதிகார குடும்பங்களை எப்படி கண்டு பிடித்து வீடு புகுந்து எப்படி அழித்திருப்பான்?

மற்றுமொரு நிகழ்வு, விஸ்வநாத நாயக்கர் மதுரைக்கு ஆட்சி செய்ய வரும்போது அவருக்கு உதவியாக வந்தவர், அரியநாத முதலி, காஞ்சிபுரம் அருகில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஏழை வெள்ளாள வகுப்பினர். இவர் காஞ்சியிலிருந்து விஜயநகரத்திற்குச் சென்று அங்கு அரண்மனையில் கணக்கராக இருந்துள்ளார். தமிழகத்தில், பாளயங்கள் அமைத்தது அரியநாத முதலிதான்.

ஏற்கனவே தொண்டைமண்டல வெள்ளாளர்களுக்கு தெலுங்குஅரசர்கள் தொடர்பு இருந்துள்ளது என்பது தெரிகிறது. அதுமட்டுமல்ல சித்திரமேலி பெரியநாடு பற்றி படிக்கும்போது அதன் நிர்வாகிகள் தமிழில் மட்டுமல்லாது வடமொழிகளிலும் ஆழ்ந்த திறமைப் பெற்றவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். உயர் கல்விஞானம் கொண்ட வெள்ளாளர்கள் அன்னியர்களுடன் சுலபமாக பழகும் வழக்கம் இயல்பாகவே வந்திருக்கும். இதன் காரணமாக தெலுங்கு சோழர்கள் காலத்திலிருந்தே முக்குலதோரின் அரசியல் அதிகாரங்களை கைப்பற்ற வெள்ளார்கள் முயன்று இருக்க வேண்டும்.

தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அனுராதபுரம் வரை விரிந்து இருந்த தமிழ் சமுதாயம் குறுகியது நாயக்கர்கள் கால கட்டத்தில்தான்.அதாவது வெள்ளாளர்கள் அரசாங்க அதிகாரத்தில் நுழைந்த போதுதான். சிங்களவர்களுக்கும், பாண்டிய அரச வம்ஸத்திற்கும் காலம் காலமாக திருமண உறவு இருந்துள்ளது. பாண்டிய வம்சம் சீர்குலைந்த பிறகு, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள உறவுகள் பல்வேறு காரணங்கள் காரணமாக பிளவு ஏற்பட்டது. அதில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிற்கால சோழர்கள் தங்களுடைய ஆட்சிக்குட்பட்ட பிற நாடுகளில் வேளிர் படை, அகம்படியர் படை இவர்களை பாதுகாப்பிற்காகவும், வெள்ளாளர்களை விவசாயத்திற்காகவும், நிர்வாகத்திற்காகவும் அமர்த்தியுள்ளார்கள். அதனால்தான் முக்குலதோரில் கள்ளர் ,மறவரை விட , அகம்படியர் மைசூர், வாராங்கல், முதல் இலங்கை வரை இருந்துள்ளனர். அகம்படியர்கள் தஞ்சையில் தேவர்கள் என்றும் பிள்ளை என்றும் அழைக்கப் படுவார்கள். தென்பாண்டி மண்டலத்தில், தேவர் என்றும், சேர்வை என்றும் அழைக்கப்படுவார்கள்., தொண்டைமண்டலதில் , முதலியார்கள், நாயக்கர்கள் என்றும் அழைக்கபடுவார்கள். அதாவது அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் பிள்ளை, சேர்வை,முதலியார்கள் என்றும், போர் மற்றும் இராணுவத்தில், காவல் கடமையில் இருப்பவர்கள் தேவர்கள், நாயக்கர்கள் என்று அழைக்கப் படுவார்கள். நாயக்கர்கள் போர் மற்றும், காவல் தொழிலில் ஈடுபடுபவர்கள் அதனால்தான் தொண்டை மண்டலத்தில் அகம்படியர் நாயக்கர், வன்னிய நாயக்கர்கள் இருக்கிறார்கள்.( ஒரு அன்பர் அகம்படியர் ஆனால் நாயக்கர் என்ற பட்டம் உள்ளது என்றார். இதைப் படித்தால் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.)

பிற்கால சோழர்களின் காலத்திற்குப் பிறகுதான் தொன்மையான தமிழ் பழங்குடி போர்மர்பினர் ,குறுநில மன்னர்கள் அழிக்கப் பட்டனர். உதாரணத்திற்கு, அதியமான், மலையமான்,சம்புவரையர், முத்தரையர், இவர்கள் மட்டுமல்ல எயினர், வேட்டுவர் என்று பல மலைவாழ் பழங்குடியினரும் காணாமல் போனார்கள். மேலும் பிற்கால சோழர்கள் ஒரு குடையின் கீழ் தங்களது ஆட்சியைக் கொண்டு வர குறுநில மன்னர்களை ஒடுக்கினார்கள்.

காவேரியின் நீர்வளத்தை முழுமையாக பயன்படுத்த நினைத்ததால் காடுகளை அழித்து அதனை விவசாய பூமியாக மாற்றினார்கள். இதனால் பிற்கால சோழர்கள் காலத்தில் உழவர்களான வெள்ளாளர்கள் அதிகாரம் பெற்றனர். மேலும் வெள்ளாளர்கள் ஆதீனங்கள் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு கல்வி ,கேள்விகளில் சிறந்து இருந்தனர். பேரரசுகள் மறைந்த பிறகு அதுவாரை அரசு நிர்வாகத்தில் இருந்த போர்மரபினர்கள் மெல்ல மெல்ல தங்கள் அதிகாரத்தை இழக்க,,வெள்ளாளர்கள் அரசு அதிகாரங்களை கைப்பற்றி தங்களை சத்- சூத்திரர்கள் என்றழைத்துக் கொண்டனர். இந்த நிலை 18ஆம் நூற்றாண்டுவரை இருந்து வந்துள்ளது என்பதை Edgur Thurston, ‘Caste and Tribes in South India’.என்ற நூலில் அறியலாம். மேலும் வெள்ளாளர்கள் தங்களை துளுவ வெள்ளார்கள் என்று விஜயநகரம் துளுவர்களின் ஆட்சியில் வந்த பிறகு இவ்வாறு அழைத்துக் கொண்டார்களா என்று தெரியவில்லை. கிருஷ்ண தேவராயர் துளுவ வம்சாவளியில் வந்தவர். வெள்ளாளர்கள் பிரமணியத்தைக் காப்பியடித்து தங்களை உயர் சாதியினராக காட்டிக்கொண்டனர். ஆங்கிலயர்கள் காலத்தில் அரசாங்க வேலைக்கு அதிக போட்டி பிராமணர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும்தான் இருந்துள்ளது.

சோழன் காந்தளூர்ச்சாலையை கைப்பற்றி 100 வருட சேர சோழ போரினை உருவாக்கி, தொன்மையான தமிழ் தேசமான சேரளத்தை ,கேரளமாக்கினான். 10ஆம் நூற்றாண்டில் கேரளம் உருவானது. தெலுங்கனுக்கு பெண்னைக் கொடுத்து, தெலுங்கர்கள் சோழ நாட்டை ஆள வழி வகுத்தான், பிரமணத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தான் சுர்திரர்களில் வெள்ளாளர்களை மட்டும் உயர்தினான். சோழனை தடுத்து நிறுத்தியது பாண்டியனே. தமிழினத்தை அன்றும்,இன்றும் என்றும் காத்து நிற்பதால் தான் இன்றும் தமிழகத்தில் எங்கும் பாண்டியனின் பெயர் பட்டி தொட்டிகளில் எல்லாம் பேர் சொல்லி நிற்கிறது. தென்பாண்டி மண்டலத்தில்தான் இன்றுவரை பிரமிண ஆதிக்கம் இல்லை, பிரமிணர்களைப் பார்த்து காப்பியடிப்பதும் இல்லை.

ஏற்கெனவே தெலுங்கு சோழர்கள் காலத்திலே தொண்டைமண்டலம் மெல்ல மெல்ல தமிழகத்தை விட்டு அந்நியர்களின் வசமானது. துலுக்கர்களால் துரத்தப்பட்ட வந்தேறிகள் தமிழக தெலுங்கர்களால் அடைக்கலம் தரப்பட்டது. தமிழகத்தின் காட்டுப் பகுதிகளையெல்லாம் ஆக்கிரமித்து பாளயங்களாக்கி தங்கள் அரசியல் அதிகாரத்தை ஊன்றிக்கொள்ள தமிழனிடம் சாதி பேதங்களை உருவாக்கினான்.விஜயநகர பேரரசு முற்றிலும் பார்ப்பன வர்ணாசிரமத்தை அடிப்படையாக கொண்டது. 11ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் எங்கும் சாதி பேதங்கள் இல்லை.

தமிழ்ச் சமுதாயம் மூன்று வகுப்பினர்களைக் கொண்டது. 1.காவலன், வணிகன், சூத்திரன். அறிவோன் எந்த வகுப்பினராகவும் எந்த தொழில் செய்பவராகவும் இருக்கலாம். அறிஞர்களை,ஆன்றோர்களை, மக்கள் நலம் காப்பவர்களை மன்னனும், மக்களும் போற்றி வணங்கினர். போர்மரபினர்கள் காவலர்களாகவும், குறுநில மன்னர்களாகவும். பேரரசர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இங்கு போர்மரபினர் எனப்படுபவர்கள் முக்குலத்தோர், முக்குறுவார், முத்தரையர், வேளிர், கொங்கர், மலையமான், அதியமான், எயினர், இன்னும் பலர். துலுக்கர் மற்றும் நாயக்கர்கள் வரவால் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தொன்மையான தமிழ் குடிகள் அழிந்ததாக கூறுகின்றனர். இவர்கள் இராணுவம்,காவல் (போலீஸ்), கோட்டைக் காவல் வரிவசூல், அரச நிர்வாகம் போன்ற பொறுப்புகள் உள்ளவர்கள்.

வணிகர்கள் மிகப்பெரிய பன்னாட்டு வணிகர்களும், பெரும் வணிகர்களுமான, நானாதேசிக வணிகர்கள் என்றழைக்கப்பட்டார்கள். செட்டியார்கள் மட்டுமின்றி பரதவர்களும் செல்வாக்கு மிக்க வணிகர்களாக இருந்துள்ளனர்.

சூத்திரர்கள் தொழில் முறைகளை அறிந்த சூத்திரதாரிகள். இவர்கள் வலங்கை, இடங்கை என்ற இருபிரிவுகளால் அழைக்கப்பட்டனர். விவசாயம் அதைச் சார்ந்த தொழில்களைக் கொண்டவர்கள் வலங்கைகள். வெள்ளாளர்கள், பள்ளர்கள், உழவுத்தொழிலுக்கு கருவிகள் செய்யும் ஆசாரிகள், விவசாயப் பொருட்களால் வரும் எண்ணை, போன்றவற்றை விற்கும் வணிகர்கள் பனையேறுபவர்கள் போன்றவர்கள், இவர்கள் அரசனுக்கு வலப்புறம் அமர்வார்கள் . விவசாயத்திற்கு அப்பாற்பட்ட தொழில் செய்பவர்கள் இடங்கைகள் இடையர்கள், நெசவாளர்கள்,வண்ணார்கள், பறையர்கள் போன்றவர்கள் இவர்கள் அரசனுக்கு இடப்புறம் அமர்வார்கள். இன்னும் எண்ணற்ற தொழில்சார்ந்த தமிழினம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு அரசவையில் அரசனுக்கு வலப்புறம், இடப்புறம் அமர்ந்து அரசாங்கத்தில் பங்கேற்று உள்ளனர்.

அதுமட்டுமல்ல மிகப்பெரிய கோவில்கள் தனிப்பட்ட collectorate ஆக சுதந்திர நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளது. இதுவே பின்னர் ஆதினங்களாக அழைக்கப்பட்டது. குடிமராமத்து, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி வளர்ச்சி இவையெல்லாம் இவர்களது பொறுப்பானது. இந்த கோவில்கள் அல்லது ஆதீனங்கள், அவர்களுக்கென்று தனிக் காவல் படைகளை, பிரிவினரை வைத்திருப்பார்கள். பெரும்பாலும் கோவில்கள் ஆதீனங்கள் வன்னியர்களை தங்களது கோயில் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளுக்கும் வைத்திருந்தன.. குறிப்பாக தொண்டைமண்டலம் மற்றும் சோழ மண்டலம். வன்னியர்களை படையாட்சிகள் என்று அழைப்பார்கள்.வன்னியர்கள் போர்க்காலங்களில் படைகளுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் உடனுக்குடன் கவனித்ததால் இவர்களை படையாட்சிகள் என்றார்கள். கூகையூர் கல்வெட்டில் குறிப்பிடபடும் காவலர்கள் தனிப்பட்ட சிறு காவலர்கள் ( watchman) . இராணுவம், போலீஸ் வேறு. முக்குலத்தோர் எந்தவகையிலும் வலங்கை,இடங்கை பிரிவுகளில் இல்லை.

சித்திரமேலி பெரியநாடு, குறுநில அரசுகள் போர்மரபினரை பாதுகாப்பிற்காக வைத்திருந்தனர். இவைப் போன்றே நானாதேசிக வணிகமையங்கள் போர்மர்பினரை பாதுகாப்பிற்காக வைத்திருந்தனர். போர்க்காலங்களில் இந்தப் படைபிரிவுகள் பேரரசு படைகளுடன் சேர்ந்து கடல் கடந்தும் போருக்குச் செல்லும். பாண்டிய மண்டலத்தில் முக்குலத்தோரும், சேர மண்டலத்தில் நாயர்களும் இராணுவத்தையும் காவலையும் மேற்கொண்டனர். இன்றளவும் இவர்களது ஆதிக்கம் இவ்விரு மண்டலங்களில் இருந்து வந்துள்ளது. ஆனால் காலத்தின் கொடுமையால் சோழ, தொண்டைமண்டலத்தில் அகம்படியரும் வேளிரும் இன்ன பிற போர்மரபினர்கள் செல்வாக்கு இழந்து காணாமற் போய் விட்டார்கள்.

இப்படிபட்ட விவசாயத்தைச் சார்ந்த சமுதாய அமைப்புகளே சித்திரமேலி பெரியநாடு, பிரம்மதேயம், ஆதீனங்கள், வணிகமையங்கள், இவைக்களது நிர்வாகம் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடந்து வந்துள்ளது.அனைத்து வகுப்பு பிரதிநிதிகள் நிர்வாகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். (வகுப்புகள்தான் உண்டு, சாதி வேறுபாடு இல்லை.)வளமான காலங்களில் போர்க்காலங்களில் அதிக வரிகளும், பஞ்ச காலங்களில் குறைந்த வரிகளும் விதிக்கப்பட்டன. வரிகள் அந்தந்த சமுதாய அமைப்களின் கிராம, அதன் பொறுப்பில் இருக்கும் நிர்வாக வளர்ச்சிக்குமே செலவிடப்பட்டது. நீதியும் நிர்வாகமும் அந்தந்த சமுதாயத்திடமே இருந்தது.

Tamil society was more republic than autonomous. There was no caste discrimination. - that people were never associated with caste as an organization but they were integrated as caste within the society. – Burton Stein.

இதுதான் தமிழினம், இதுதான் தமிழ் சமுதாயம்.. இதைப் புரிந்துக் கொண்டால் என் இளைய தலைமுறை நமது சகோதர சாதிகளை எப்படி மதித்து வாழ வேண்டும் என்று அறிந்துக்கொள்ளும். இதைத்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வலியுறுத்தினார். இதைதான் தலைவர் பிரபாகரன் நடைமுறைப் படுதினார்.

ஆனால், தமிழகத்தின் தமிழனக் காவலர்களுக்கு தமிழ் சமுதாயம் துண்டுபடாவிட்டால் எங்கே துயர் துடைக்க முடியாமல் போகுமோ என்ற ஆதங்கத்தில் சாதீயில் நம்மை முக்கி மூழ்கடிக்கிறார்கள்.

தமிழகத்தில் நடந்த முதல் சாதிக் கலவரம் எங்கு நடந்தது தெரியுமா?

பேரரசுகள் அழிந்து அவர்களின் பிரதிநிதிகளான போர்மரபினர் அழிக்கப்பட்டும், அதன் தலைமைகள் சிதறுண்டு போனபோது, வெள்ளாளர்கள் தங்களை மறைமுகமாக அதிகாரவர்க்கமாக நிலை நிறுத்திக் கொண்டார்கள். 1482-இல் தஞ்சை, திருச்சி தென்னாற்காடு அதாவது அன்றைய சோழ நாட்டில் வெள்ளாளர்கள், வன்னியர்களின் துணையுடன், நாயக்கர்களை திருப்திபடுத்தவும், தங்களை அதிகாரிகளாக நிலை நிறுத்தவும் இடங்கை,வலங்கை பிரிவில் உள்ள 96 சாதிகளின் மீது வரிவசூல் மட்டுமல்ல சாதி வேறுபாடுகளையும் கொண்டு வந்தனர்.

இறையேலி பரப்பி, பந்தரவாடி, சீவிதபரப்பு என்பதும் கோயில் நிலங்கள். இந்நிலங்கள் அடைப்பு – நீர்பட்டி என்று குத்தகையோ சேர்வையோ, நில வரிகளோ கிடையாது. இவைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு இதனை இடங்கை,வலங்கை மக்கள் அனுபவித்து வந்தார்கள். நாடிழந்த ,துரத்தப்பட்ட நாயக்கர்கள் ( நாயக்கர்கள் என்பது 13ஆம் நூற்றாண்டில் தெலுங்கர், கன்னடர்,இருவரையும் சேர்த்தது). தலைமை இல்லாத தமிழகத்தில் வெள்ளாளர்களைப் பயன்படுத்தினார்கள். தங்களைக் ஆண்டாண்டு காலம் காவல் காத்தவனைக் காட்டிக்கொடுத்து, வந்தேறிகளுக்கு வாசலை திறந்து வைத்து வெள்ளாளர்கள் ஆளா விரும்பியதால், வன்னியர்கள் தங்களை காவல்காரர்களாக உயர்திக்கொள்ள வெள்ளாளர்களுடன் இணைந்து பிற தமிழ்ச் சாதிகளை அடக்க நினைத்தார்கள். கொற்றவர்கள் மறைய, சொந்த சகோதரன் காட்டிக்கொடுக்க, பொருள் இழந்த நாயக்கனின் அநியாய வரிவசூல், தமிழகத்தில் முதல் சாதிக் கலவரம் அரங்கேர காரணமானது. இதன் பலன் 

1. தமிழர்களிடம் அநியாய வரிவசூல், 

2.தமிழர்கள் அனுபவித்து வந்த காணி நிலங்களைச் சூறையாடல், 

3.தமிழ் சமுதாயத்தில் வேற்றுமையை உருவாக்கியது. 

வெள்ளாளர்களின் நாடாளும் ஆசையே தமிழினம் சிறுமைப்பட ஆரம்பித்தது.

ஒரு உண்மையை நாம் முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும். சிறு குழுவாக , மொழி தெரியாமல் வரும் வந்தேறிகள் உடனடியாக நாடு பிடிக்கவோ, நிலங்களை கைப்பற்றவோ முடியாது. உள்ளிருந்து துரோகம் செய்பவர்களாளேயே இனம் அடிமைப்படும்,வீழும்.

தென்பாண்டி மண்டலமும் பாண்டியனுமே தமிழினத்தை பல நூற்றாண்டுகளாக காத்து வருகிறார்கள். எந்தவொரு அந்நிய ஆட்சிக்கும் வட தமிழகம் என்றுமே எதிர்த்தது இல்லை என்பது ஏன் என்று யோசிக்க வேண்டும். சிறுபான்மையாக குறுநிலமாக இருந்தாலும் கொங்கு மண்டலம் மேற்கில் தங்களது உரிமைகளை காத்து நின்று வருகிறார்கள். தெலுங்கு சோழர்கள் பின்னர் நாயக்கர்கள் வந்தபோதும் தலைவாசலை வடதமிழகம் திறந்து வைத்து வந்தாரை வாழ வைத்து தன் இனத்தை காட்டிக் கொடுக்க ஆரம்பித்தது.

நாயக்கர்கள் வரவால் முற்றிலும் அழிந்தது வீரமும் தீரமும் மிக்க பரதவர் குலம். டச்சுக்காரர்கள், போர்தூகீசியர்கள் தமிழ் கடலோரப்பகுதிகளை முற்றிகையிட்டபோது எந்தவொரு எதிர் நடவடிக்கையையும் நாயக்கர்கள் ஆட்சி மேற்கொள்ளவில்லை. மதத்தின் பேரால் போர்தூகீசியர்கள் தமிழர்களின் வாழ்வில் ஊடுருவதை வன்மையாக தடுத்து நிறுத்தியவர் இராமனாதபுர மன்னர் கிழவன் சேதுபதி. அதுமட்டுமல்ல நாயக்கர்களை அதிகாரத்தை மதுரை நகரத்துடன் தடுத்தவந்ததும் சேதுபதிகளே. மதுரையை முற்றுகையிட வந்த கன்னடர்களை மைசூர் வரை விரட்டியடித்த புகழ் பெற்ற மூக்கறுப்பு போர் நிகழ்தியவர் கிழவன் சேதுபதி, மூக்கறுப்பு போரின் வெற்றிக்கு முழுக்கரணமானவர் தளபதி வயிரவன் சேர்வை அவர்கள். அவர் சேது மண்டலத்திலிருந்து படை திரட்டி சென்ற போது அவர் படையில் மறவர்களுடன் சேர்ந்து போரிட்டு வெற்றியை , தமிழர் மானத்தைக் காத்தவர்கள் மதுரை வாழ் கள்ளர்கள், அகம்படியர்கள். எனவே முக்குலத்தோர் அநாவசியமாக தங்களுக்குள் உயர்வு தாழ்வு பார்க்க வேண்டாம். இன்றுவரை அனைத்துவகை அரசியல் ஆதிக்கத்திலுமிருந்து தங்களை காத்து வருவது தொன்மையான போர்மரபினரான முக்குலம் என்பது சரித்திர உண்மை.

முக்குலத்தோர் போர் களங்களில் இருக்கும்போது அவர்களது நிலங்களையும் விவசாயத்தையும் குடும்பங்களையும் பாதுகாத்தது பள்ளர்களும், பறையர்களும்தான். இன்றைக்கும் நமது குலதெய்வ கோயில்களில் இவர்கள் பூசாரிகளாகவும், முதன்மை மரியாதைப் பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அரைகுறையாக வரலாறை அறியாமல் நமக்குள் சண்டை எதற்கு? ஆங்கிலேயர்கள் காலத்தில் சாணார்கள் அரசியல் ஆதாயம் பெறவும், பின்னர் காமராஜரின் அரசியல் சூழ்ச்சியிலும் ,பின்னர் வந்த திராவிடக் கட்சிகளின் அரசியல் பாதுகாப்பிற்காகவும் முக்குலதோருக்கும் பள்ளர்கள், பறையர்களுக்கும் இடைவிடாத வேற்றுமைகளை உருவாக்கி வருகிறார்கள்.